மளிகை கடைக்காரரிடம் 14 லட்சம் மோசடி செய்த பலே கில்லாடி பெண்கள்; இருவர் கைது
சென்னை:கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் ஜெயலித் (39). செம்பரம்பாக்கத்தில் மளிகை கடை நடத்தி வருகிறார்.இவர் வாடகைக்கு குடியிருந்து வரும் உரிமையாளர் சார்லஸ் என்பவர் மூலம் மாதவரத்தை சேர்ந்த அமலி டார்த்தி (60), சசிரேகா (36) ஆக இரு பெண்கள் நண்பராகி உள்ளனர். இந்நிலையில் கடந்த 2023ம் ஆண்டு ஆன்லைன் மூலம் தொழில் செய்யலாம் என்று அமலி டார்த்தி, சசிரேகா ஆகிய இருவரும் ஜெயலித்திடம் தெரிவித்துள்ளனர். இதற்கு சம்மதம் தெரிவித்து ரூ14 லட்சம் அவர்கள் இருவரிடமும் கொடுத்துள்ளார். ஆனால் அவர்கள் கூறியது போல் ஆன்லைன் தொழில் எதுவும் தொடங்கவில்லை.இதனால் சந்தேகம் அடைந்த ஜெயலித் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அவர்கள் அந்த பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட ஜெயலித் மாதவரம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயலித்திடம் மோசடி செய்து ஏமாற்றியதாக வழக்கு பதிவு செய்து அமலி டார்த்தி, சசிரேகா ஆகிய இரு பெண்களையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
What's Your Reaction?