பிரபல பிரியாணி கடையில் வாலிபர் படுகொலை; ஆட்சியர் அலுவலகம் அருகே நடந்த கொடூரம்
தருமபுரி மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இலக்கியம்பட்டியில் பிரபல பிரியாணி கடையான தொப்பி வாபா பிரியாணி கடையின் கிளை கடந்த சில வாரங்களுக்கு முன்பு திறக்கப்பட்டது.இக்கடையில் அதே பகுதியைச் சேர்ந்த முகமது ஆசிக் (வயது 25) பிரியாணி மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.இதனிடையே நேற்று இரவு 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று உணவகத்திற்கு உணவு சாப்பிடுவது போல் வந்திருந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த முகமது ஆசிக்கிடம் உணவு தொடர்பாக பேச்சு கொடுத்தனர். முகமது ஆசிக் பேசிக் கொண்டு இருக்கும் போதே அவரை சுற்றி வளைத்த கும்பல் எதிர்பாராத நேரத்தில் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தி, இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களைக் கொண்டு முகமது ஆசிக்கை சரமாரியாக தாக்கினர்.இதனால் நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்தார். உடனடியாக அக்கும்பல் அப்பகுதியில் இருந்து தப்பி ஓடியது. இதனைத் தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் முகமது ஆசிக்கை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், முகமது ஆசிக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?