கஞ்சா வைத்திருந்த இளைஞர் கைது; 1.5 கிலோ கஞ்சா பறிமுதல்

கமுதி அருகே சாயல்குடி காணிக்கூர் சாலையில் கோவிலாங்குளம் காவல் ஆய்வாளர் விமலா தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது காணிக்கூர் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த கிடாத்திருக்கை கிராமத்தை சேர்ந்த முத்திருளாண்டி மகன் பாலமுருகன் (32) என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் கையில் வைத்திருந்த பையில் 1.5 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் பாலமுருகனை கைது செய்து புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?






