15 வயது மாணவனுடன் பள்ளி ஆசிரியை உல்லாசம்; சிவகாசி அருகே பரபரப்பு

Jul 26, 2024 - 05:56
Jul 26, 2024 - 17:44
 0  24
15 வயது மாணவனுடன் பள்ளி ஆசிரியை உல்லாசம்; சிவகாசி அருகே பரபரப்பு

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே ஒரு பகுதியை சேர்ந்தவர் பவித்ரா(24). தனியார் பள்ளி ஆசிரியை.இவர் கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவரது வீட்டில் பள்ளி மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து வந்துள்ளார். இங்கு அருகில் உள்ள பகுதியை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவன் படிக்க வந்துள்ளார்.அப்போது பள்ளி மாணவனுக்கும், பவித்ராவிற்கும் நெருக்கம் ஏற்பட்டது. மாணவருடன், ஆசிரியை அடிக்கடி தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளார். மாணவனின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதை பார்த்த பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போது மாணவன், டியூஷன் ஆசிரியையுடன் இருந்த உறவு பற்றி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீஸ் ஸ்டேஷனில் மாணவனின் தந்தை புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிந்து ஆசிரியை பவித்ராவை கைது செய்தனர். மாணவனை பாலியல் வலையில் வீழ்த்திய டியூஷன் ஆசிரியை கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow