பெண்களை சீண்டினால் தானே போக்சோ;அறிவாளியை அலேக்காக தட்டி தூக்கிய போலீசார்

May 17, 2024 - 15:33
 0  11
பெண்களை சீண்டினால் தானே போக்சோ;அறிவாளியை அலேக்காக தட்டி தூக்கிய போலீசார்

பாண்டிச்சேரி ரெட்டியாராபேட்டை பகுதியில் வசித்து வருபவர் சீனிமுகம்மது. இவரது மகன் அமீர் அப்துல் காதர்(20).இவர் திருட்டு,வழிப்பறி உள்பட பல்வேறு குற்ற சம்பவங்களில் தொடர்புடையவர். அமீர் அப்துல் காதர் மீது கடலூர் மற்றும் பாண்டிச்சேரியில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவர் தேடப்படும் குற்றவாளியாக இருந்து வருகிறார்.இந்நிலையில் இவர் பாண்டிச்சேரியில் இருந்து செங்கல்பட்டு பகுதிக்கு வந்து இரண்டு மாதங்களாகிறது. கடந்த இரண்டு மாதங்களில் காஞ்சிபுரம் பைபாஸ் சாலையில் உள்ள ரத்னம் நகரில் உள்ள கருவேப்பிலை வியாபாரி மகேஷ் வீட்டில் நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தை திருடியிருக்கிறார். அதனையடுத்து செங்கல்பட்டு காய்கறி மார்க்கெட் அருகே மேட்டுத் தெருவில் பட்டப்பகலில் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த பைக்கை திருடி இருக்கிறார். அதே காய்கறி மார்க்கெட் பூசனிக்காய் வியாபாரியிடம் பூசனிக்காய் வாங்குவது போல் பாவனை காட்டி கல்லாவில் இருந்த ரூ.64,000 பணத்தைத் திருடி சென்றது என பல குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.இவர் செய்த குற்றச் சம்பவங்களுக்குமான சிசிடிவி காட்சிகளை செங்கல்பட்டு போலீசார் சேகரித்து வைத்திருந்தனர். இந்த வாலிபர் இந்த குற்றச் சம்பவங்களையும் தாண்டி செங்கல்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் 10முதல் 13வயது வரை உள்ள சிறுவர்களை குறிவைத்து அவர்களை கத்தியை காட்டி மிரட்டி ஒவ்வொரு முறையும் ஒரு சிறுவன் என திட்டமிட்டு சிறுவனை காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று சிறுவனை கட்டாயப்படுத்தி ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டு பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தது போலீசாருக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. இதே போல் நான்கு சிறுவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.அதனடிப்படையில் சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து செங்கல்பட்டு டிஎஸ்பி புகழ் கணேஷ் தலைமையில் தனிப்படை அமைத்து அமீர் அப்துல் காதரை தேடி வந்கனர். போலீசார் தன்னை தேடுவதை தெரிந்து கொண்ட அந்த வாலிபர் தாம்பரம் பகுதியில் சுற்றித் திரிவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து தனிப்படையினர் தாம்பரம் சென்று அமீர் அப்துல் காதரை மடக்கி பிடிக்க முயற்சித்த போது தப்பித்து ஒட முயற்சித்த போது எதிரில் வந்த காரில் பலமாக மோதி கீழே விழுந்தார்.இதில் காலில் பலத்த காயமடைந்த அமீர் அப்துல் காதரை செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் இரண்டு நாட்கள் சிகிச்சை அளித்து மாவுக்கட்டு போட்டு அவர்மீது போக்சோ வழக்கு பதிவு செய்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow