11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை;3 பேர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது

May 30, 2024 - 15:54
 0  8
11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை;3 பேர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது

சென்னையின் வில்லிவாக்கத்தில் வசித்து வரும் தம்பதிக்கு 11 வயது மகள் ஒருவர் உள்ளார். இவரின் பெற்றோர்கள் குடிபோதைக்கு அடிமையான காரணத்தால் சிறுமி பாட்டியில் கவனிப்பில் வளர்ந்து வந்தார்.சில நாட்களுக்கு முன் அந்தரங்க உறுப்பில் கடுமையான வலி ஏற்பட்டதாக பாட்டியிடம் சொல்லி கதறி அழுதார். உடனே பாட்டி அதிர்ச்சி அடைந்து சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் திடுக்கிடும்ட் தகவலைக் கூறியுள்ளனர்.அதன்படி அந்த சிறுமி ஆறு மாத காலமாக தொடர்ந்து மூன்று பேரால் பாலிய வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இதனால் அதிர்ந்துபோன் பாட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் சிறுமியின் பெரியப்பா மகனான அண்ணன் முறை சிறுவன், அவன் நண்பரான மற்றொரு சிறுவன், தையல் கடை முதியவர் என மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். இவர்கள் 3 பேரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow