நீரில் மூழ்கி பள்ளி மாணவன் பலி

மதுரை திருநகர் மகாலட்சுமி காலனி ரமேஷ் மகன் ஹரிஷ்பாபு 16. பிளஸ் 1 மாணவரான இவர் நேற்று மாலை தனது நண்பர்களுடன் விளாச்சேரி கண்மாயில் குளிக்க சென்றார். ஆழமான பகுதியில் சென்ற போது சகதியில் சிக்கிய ஹரிஷ்பாபு நீரில் மூழ்கினார். திருப்பரங்குன்றம் தீயணைப்பு வீரர்கள் ஹரிஷ்பாபு உடலை மீட்டனர். திருநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
What's Your Reaction?






