ரூ.2.40 லட்சம் லஞ்சம்;ஊராட்சி தலைவி உள்பட 3 பேர் கைது

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கனகராஜ், ரவிச்சந்திரன்.விவசாயத் தோட்டத்திற்கு தண்ணீர் குழாய் இணைப்புக்காக கொத்தமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் விண்ணப்பித்தனர். இதற்காக ஊராட்சி மன்ற தலைவி மல்லிகா, துணை தலைவர் சண்முகம், ஊராட்சி செயலாளர் ராஜூ ஆகியோர் ரூ.2.40 லட்சம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து விவசாயிகள் இருவரும் ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தனர். போலீசார் ரசாயனம் தடவிக் கொடுத்த ரூ.2.40 லட்சத்தை விவசாயிகள் நேற்று ஊராட்சி தலைவி மல்லிகா, துணைத் தலைவர் சண்முகம், செயலாளர் ராஜூவிடம் கொடுத்தனர். அப்போது மறைந்திருந்த ஈரோடு லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், மூவரையும் கைது செய்தனர்.
What's Your Reaction?






