ஆன்லைன் ரம்மியால் ரூ.25 லட்சம் இழப்பு; போலீஸ் ஏட்டு தற்கொலை

Apr 27, 2024 - 22:05
 0  7
ஆன்லைன் ரம்மியால் ரூ.25 லட்சம் இழப்பு; போலீஸ் ஏட்டு தற்கொலை

ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ரூ.25 லட்சம் இழந்த போலீஸ் ஏட்டு, எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தஞ்சாவூர் அருகே வெள்ளம்பேரம்பூரைச் சேர்ந்தவர் புகழேந்தி (வயது 43). திருமணமாகி பிரம்மவித்யா (37) என்ற மனைவியும், புஷ்பசாந்தா (14) என்ற மகளும், சாந்தகுமார் (12) என்ற மகனும் உள்ளனர். புகழேந்தி மருவூர் காவல் நிலையத்தில் ஏட்டு போலீஸாக பணியாற்றி வந்தார். கடன் பிரச்னையால் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.குறிப்பாக ஆன்லைனில் ரம்மி விளையாடி 25 லட்சம் வரை இழந்துள்ளார். இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். சம்பவத்தன்று அவர் எலி மருந்தை விழுங்கி மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடன் பிரச்னையில் காவலர் ஒருவர் எலி மருந்து சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow