பத்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; கம்யூனிஸ்ட் நிர்வாகி கைது

Apr 27, 2024 - 21:38
 0  10
பத்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; கம்யூனிஸ்ட் நிர்வாகி கைது
பத்து வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; கம்யூனிஸ்ட் நிர்வாகி கைது

திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே உள்ள கோவிலூரை சேர்ந்தவர் பாலுபாரதி (வயது 45), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாவட்டக்குழு உறுப்பினராக உள்ளார்.இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் இவரும் குஜிலியம்பாறை அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.அந்த பெண்ணுக்கு 10 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் கள்ளக்காதலி வீட்டில் இல்லாத நேரத்தில் 10 வயது சிறுமிக்கு பாலுபாரதி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். மேலும் கடந்த 2 மாதங்களாக பாலுபாரதி அடிக்கடி வீட்டுக்கு வந்து, தாங்க முடியாத அளவுக்கு சிறுமியை கொடுமைப்படுத்தியுள்ளார். அதீத போதையால் சிறுமிக்கு தொல்லைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அந்த சிறுமியிடம் தன் பேச்சை கேட்டு நடந்துகொள்ள வேண்டும் என்றும், ஒத்துழைக்க வேண்டும் என்றும் மிரட்டினார். இது குறித்து வெளியே சொன்னால் கைது செய்து விடுவதாக அந்த நபர் சிறுமியை மிரட்டியதாக கூறப்படுகிறது. பல நாட்களாக இந்த கொடுமை தொடர்ந்த நிலையில், சிறுமியின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டதைக் கண்டு சிறுமியின் தாய் விசாரித்துள்ளார்.அப்போது சிறுமி கண்ணீருடன் தனக்கு நேர்ந்ததை தனது தாயிடம் கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, மகளிர் காவல் ஆய்வாளர் வசந்தா பாலுபாரதியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow