சென்னை: சென்ரலில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை; போலீஸ் விசாரணை

சென்னை: சென்ட்ரல் ரயில் நிலைய முதல் மாடியில் அதிகாரிகள் தங்கும் ஓய்வு அறைக்கு எதிரில் தூக்கில் தொங்கிய இளம் பெண் கொலையா? தற்கொலையா?
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் மாடியில் அலுவலர்கள் ஓய்வு எடுக்கும் அறைக்கு வெளியே கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த ரேஷ்மா (25).கருப்பு துணியால் இரும்பு ஸ்டாண்டில் தூக்கில் தொங்கியவாறு அமர்ந்த நிலையில் பிணமாக கிடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இவரை யாராவது கொலை செய்தார்களா அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என சென்ட்ரல் ரயில் நிலைய போலீஸ் துணை சூப்பிரண்டு கர்ணன் தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் தாயுடன் சண்டையிட்டு விரக்தியில் சென்னையில் வந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்து பிரேத பரிசோதனைக்காக இராஜீவ்காந்தி அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை எற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?






