குடித்து விட்டு தினமும் தகராறு செய்த கணவனை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி
பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை, யமுனா நகர், 2வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன்(35), தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி மங்கள லட்சுமி(30), பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் ஊர் காவல் படையில் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு தஸ்வந்த் என்ற மகன் உள்ளார்.இந்நிலையில் குடிப்பழக்கம் உடைய சீனிவாசன் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் குடிபோதையில் வந்த சீனிவாசன் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மங்களலட்சுமி வீட்டில் இருந்த கத்தியை எடுத்து கணவரின் வயிற்றில் குத்தியுள்ளார். இதில் ரத்தக்காயம் அடைந்த சீனிவாசனை மீட்டு பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர், பின்னர் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக இறந்து போனார். இதையடுத்து நசரத்பேட்டை போலீசார் சீனிவாசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து இந்த வழக்கை கொலைவழக்காக மாற்றி கணவனை குத்தி கொலை செய்த ஊர் காவல் படையை சேர்ந்த அவரது மனைவி மங்கள லட்சுமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர். குடிபோதையில் தகராறு செய்த கணவனை மனைவியே குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
What's Your Reaction?