நள்ளிரவில் ராயல் என்பீல்ட் பைக்கை திருட வந்த இருவருக்கு போலீஸ் வலை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அடுத்த பத்தலப்பள்ளி பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேஷ், இவர் உத்தனப்பள்ளி பகுதியில் இருசக்கர வாகன பழுது நீக்கும் மெக்கானிக்காக வேலை செய்து வரும்நிலையில் நேற்றிரவு வெங்கடேஷ் வீட்டில் காம்பவுண்டிற்குள்ளாக வழங்கம்போல தனது ராயல் என்பீல்ட் புல்லட் வாகனத்தை நிறுத்தி உள்ளார்.காலை பார்த்தபோது புல்லட்டின் சைட் லாக் உடைக்கப்பட்டு வாகனம் வேறு திசையில் இருந்ததால் சந்தேகமடைந்து வீட்டில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தார். அட்கோ காவல்நிலைய எதிரிலேயே வெங்கடேஷ் வீடு உள்ளநிலையில் நேற்றிரவு இரண்டு கொள்ளையர்கள் கேட் திறந்து உள்ளே சென்று புல்லட் வாகனத்தின் சைட் லாக் உடைத்து, வாகனம் ஸ்டார்ட் ஆகாததால் விட்டு சென்றதும்,அவர்கள் வந்து செல்லும் சிசிடிவி காட்சிகளை கொண்டு அட்கோ காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். காவல்நிலைய எதிரிலேயே கொள்ளையர்கள் தங்களது கைவரிசை காட்ட முயன்றது பரபரப்பை ஏற்ப்படுத்தி உள்ளது.
What's Your Reaction?






