திண்டுக்கல்:அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த விளம்பர பதாதைகள் அகற்றம்;போக்குவரத்து காவல்துறை அதிரடி

தமிழகத்தில் அக்னி வெய்யிலில் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் சேர்ந்த கனமழை பெய்து வரும் நிலையில் காற்றினாலும் மழையினாலும் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் பல்வேறு பகுதிகளில் பெரிய அளவில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.இந்தநிலையில் திண்டுக்கல் நகரில் வாகனம் அதிகம் செல்லக்கூடிய பகுதியில் பொதுமக்களுக்கு இடையுறாக சாலையின் நடுவே வைத்திருந்த 50க்கும் மேற்பட்ட பதாகைகள் போக்குவரத்து காவல் ஆய்வாளர் தட்சனாமூர்த்தி தலைமையிலான காவல்துறையினர் அகற்றினர்.
What's Your Reaction?






