சென்னிமலையில் அச்சமின்றி வாக்களிக்க போலீசார் கொடிஅணிவகுப்பு
வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்கள் பயமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னிமலையில் போலீசாரின் கொடி அணிவகுப்பு பேரணி நடைபெற்றது.இதனை பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரெண்டு கோகுலகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கலந்து கொண்டு 4 ராஜ வீதிகள், ஈங்கூர் ரோடு, அறச்சலூர் ரோடு, காட்டூர், பஸ் நிலையம், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் வழியாக வலம் வந்து குமரன் சதுரத்தில் நிறைவு செய்தனர்.இந்த நிகழ்ச்சியில் சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ், சப் - இன்ஸ்பெக்டர்கள் பிரியா, கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?