மதுரை அருகே மகளின் காதலனை சரமாரியாக குத்தி கொலை செய்த தந்தை
மதுரை மாவட்டம் அவனியாபுரம் பெரியசாமி நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (28). சுமை தூக்கும் பணி செய்து வருகிறார்.இவர் தனது உறவினர் மணியின் மகளை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்களின் காதலுக்கு சிறுமியின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையும் மீறி இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர். இதனால், சிறுமியின் தந்தையும், அவரது சகோதரரும் ஆத்திரமடைந்தனர்.இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்து வெளியே வந்த கார்த்திக்கை, காதலியின் தந்தை மணி மற்றும் அவரது மகன் தினேஷ் ஆகியோர் கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பினர். இதில் கார்த்திக் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கார்த்திக்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மகளின் காதலனை நடுரோட்டில் கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?