ஆசைக்கு இணங்க மறுத்ததால், கள்ளக்காதலியின் குழந்தைகளை கடத்தி கொலை

Apr 12, 2024 - 16:48
Apr 13, 2024 - 03:26
 0  27
ஆசைக்கு இணங்க மறுத்ததால், கள்ளக்காதலியின் குழந்தைகளை கடத்தி கொலை
ஆசைக்கு இணங்க மறுத்ததால், கள்ளக்காதலியின் குழந்தைகளை கடத்தி கொலை
ஆசைக்கு இணங்க மறுத்ததால், கள்ளக்காதலியின் குழந்தைகளை கடத்தி கொலை
ஆசைக்கு இணங்க மறுத்ததால், கள்ளக்காதலியின் குழந்தைகளை கடத்தி கொலை
ஆசைக்கு இணங்க மறுத்ததால், கள்ளக்காதலியின் குழந்தைகளை கடத்தி கொலை

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை காவல் நிலையத்திற்குட்பட்ட முண்டாசுபுரவடை கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், இவர் ஓசூர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி பிரியா வயது (27), இவர்களுக்கு தர்ஷன் வயது (3,) தர்ஷ்வன் வயது (5) இரண்டு குழந்தைகள் உள்ளது.திருமணத்திற்கு முன்பே பிரியாவுக்கும், வெங்கடேசன் வயது (21) என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. திருமணத்திற்கு பின்பும் வெங்கடேசன் பிரியா இருவரும் தங்களுடைய கள்ள தொடர்பில் இருந்ததாக பேசப்படுகிறது.நேற்றைய தினம் பிரியாவிடம் அவருடைய கணவர் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு தன்னுடன் வந்து விடுமாறு வெங்கடேசன் வற்புறுத்தியதாக கூறப்படும் நிலையில், தனக்கு குடும்பம் குழந்தைகள் இருக்கிறது என்றும், உன்னிடம் வரமாட்டேன் என்று பிரியா மறுத்துள்ளார்.இந்த நிலையில், கள்ளக்காதலன் வெங்கடேசன், பிரியாவின் இரு மகன்களை கடத்திக்கொண்டு அருகே இருக்கும் காட்டுப் பகுதியில் அழைத்துச் சென்று கல்லால் தாக்கியதாகவும், இதில் இளைய மகன் தர்ஷன் சம்பவ இடத்திலே இறந்து விட்டதாக கூறப்படுகிறது.மேலும், தன்னை போலீசார் கைது செய்து விடுவார்கள் என்ற பயத்தில் ஊருக்கு சென்ற நிலையில், வடநாட்டு மர்ம நபர்கள் இரு குழந்தைகளை கடத்திக் காட்டுக்குள் சென்று கொலை செய்து விட்டு சென்று விட்டார்கள் என்று கூறி நாடமாடியுள்ளனர். பின்னர், ஊர் பொதுமக்களை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று பார்த்து, இரு குழந்தைகளை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் தர்மபுரி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால், பரிசோதனை செய்த மருத்துவர்கள் தர்ஷன் ஏற்கனவே இறந்துவிட்டார் என்று கூறினர்.மற்றொரு குழந்தை உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நிலையில். அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக வெங்கடேசன் காதலி பிரியா இருவரிடமும் அதியமான்கோட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த தகவலறிந்த கிராம பொதுமக்கள் மருத்துவமனை வளாகத்தில் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. கொலை செய்த குற்றவாளியை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றால், தர்மபுரி சேலம் செல்லும் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபடுவோம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.கள்ளக்காதலன் கள்ளக்காதலி குழந்தைகளை தாக்கி கொலை செய்துவிட்டு வடநாட்டு தொழிலாளர்கள் மீது பழி சுமத்தி தப்பிக்க முயன்ற சம்பவம் மாவட்ட முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow