'நாங்க மும்பை போலீஸ்'.. செல்போனில் மிரட்டி பணம் பறித்த கும்பல்.. 5 பேர் அதிரடியாக கைது

Apr 14, 2024 - 06:18
 0  11

சென்னை கொளத்தூர் திருப்பதி நகரில் வசித்து வரும் வேல்முருகன் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.இந்நிலையில் கடந்த 1-ம் தேதி வேல்முருகனை செல்போனில் தொடர்பு கொண்ட ஒருவர், "ஃபெடெக்ஸ் கூரியர் கம்பெனி, மும்பை கிளையில் இருந்து பேசுகிறோம். மும்பையில் இருந்து தைவானுக்கு நீங்கள் அனுப்பிய பார்சலில் 1 லேப்டாப், 35 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் போதைப் பொருள் இருந்தது. மும்பை போலீசார் உங்களிடன் விசாரணை நடத்த உள்ளனர்,'' என்றார்.இதைத்தொடர்ந்து பேசிய மற்றொருவர், ""நான் மும்பை போலீஸ். போதைப்பொருள் அடங்கிய பார்சல் அனுப்பியதால் உங்களை கைது செய்ய வருகிறோம்'' என மிரட்டினார்.அப்போது அந்த நபர், '' நாங்கள் சொல்லும் வங்கி கணக்கில் பணத்தை அனுப்பினால். அதை ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி விசாரணை நடத்துவோம் என தெரிவித்துள்ளனர்.''இதை நம்பிய வேல்முருகன், அந்த நபரின் வங்கி கணக்கிற்கு, 49,324 ரூபாயை அனுப்பியுள்ளார்.இந்நிலையில், மர்ம நபர்கள் சிலர் வேல்முருகனை மிரட்டி ஆன்லைனில் பணம் பறித்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து கொளத்தூர் காவல் நிலையத்தில் வேல்முருகன் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில், கொளத்தூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து, சைபர் கிரைம் மற்றும் மோசடியில் ஈடுபட்ட முகலிவாக்கத்தைச் சேர்ந்த முகமது அசாருதீன், ராஜ்குமார், கணேஷ் ராஜ், எபினேசர், ரத்தினராஜ் ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow