நாமக்கல் அருகே பரபரப்பு மனைவியை கழுத்தை அறுத்து கொன்று கணவன் தற்கொலை
நாமக்கல் பரமத்தி ரோடு கொங்கு நகரைச் சேர்ந்தவர் மனோகரன் (55). இவரது மனைவி அனிதா (47). இவர்களின் மகன் ராகுல் (25), பி.இ., ஓமன் நாட்டில் இன்ஜினியராக வேலை செய்து வந்த மனோகரன் கடந்த வாரம் சொந்த ஊருக்கு வந்த நிலையில் கணவன், மனைவி இடையே இரவில் ஏற்பட்ட தகராறு அதிகாலை வரை நீடித்துள்ளது.காலை 5 மணியளவில் தகராறு முற்றியதில் ஆத்திரமடைந்த மனோகரன் மனைவி அனிதாவை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் அனிதா மயங்கி விழுந்த பின்னரும் ஆத்திரம் அடங்காத மனோகரன் தன்னிடம் இருந்த சிறிய கத்தியால் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு பின்னர் வீட்டு குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?