போதை தலைக்கேறியதால் பட்டியை கொலை செய்து பேரன் தற்கொலை

Apr 20, 2024 - 20:34
Apr 21, 2024 - 04:19
 0  9
போதை தலைக்கேறியதால் பட்டியை கொலை செய்து பேரன் தற்கொலை
போதை தலைக்கேறியதால் பட்டியை கொலை செய்து பேரன் தற்கொலை

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருகே உள்ள மேலக்காட்டுவிளை சரூர் பகுதியை சேர்ந்தவர் தாசம்மாள் (80), மகன் புஷ்பராஜ் மற்றும் மருமகளுடன் வசித்து வந்தார்.இவரது மகன் புஷ்பராஜ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், அவரின் இளைய மகன் அஜித் தாசம்மாளுடன் சரூர் பகுதியில் வசித்து வந்தார். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் அஜித் மது அருந்திவிட்டு பாட்டியிடம் அடிக்கடி தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.நேற்று தனது நண்பருடன் வீட்டுக்கு வந்த அஜித், பாட்டியிடம் தகராறு செய்துள்ளார். அப்போது கிராம மக்கள் இருவரையும் துரத்தி தாக்கியுள்ளார். அங்கிருந்து கிளம்பிய அஜித் இரவு பாட்டி வீட்டிற்கு திரும்பிய நிலையில் இன்று காலை நீண்ட நேரமாக வீட்டின் கதவுகள் திறக்கப்படாததால் அருகில் வசிப்பவர்கள் ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர்.அப்போது அஜித்தின் பாட்டி இறந்து கிடப்பதையும், அஜித் தற்கொலை செய்துகொண்ட நிலையில் இருப்பதையும் பார்த்தனர். உடனடியாக திருவட்டார் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் நடத்திய விசாரணையில் பாட்டியை கொன்றுவிட்டு அஜித் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow