இரண்டு மகள்களுடன் தாய் தற்கொலை; கிருஷ்ணகிரியில் பரபரப்பு

Jul 19, 2024 - 18:39
 0  6
இரண்டு மகள்களுடன் தாய் தற்கொலை; கிருஷ்ணகிரியில் பரபரப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரில் தாய் தனது 2 மகள்களுடன் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் கடன் பிரச்னையால் தாய் உஷா(37), மகள்கள் நிவேதா (16), சர்மிளா (11), ஆகிய மூன்று பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.பர்கூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நிவேதா 12ம் வகுப்பும், ஷர்மிளா 8ம் வகுப்பும் பயின்று வந்தனர். கடன் பிரச்னை காரணமாக, இன்று காலை ஏற்பட்ட தகராறில், ஆத்திரம் அடைந்த உஷாவின் கணவர், தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி விட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.இதனால், மனமுடைந்த மூன்று பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. வீட்டைவிட்டு வெளியேறிய உஷாவின் கணவரைப் போலீசாரும், உறவினர்களும் தேடி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow