அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிய இளைஞரை சுட்டுப்பிடித்த போலீசார்

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மேலநம்பிபுரத்தில் வசித்து வருபவர் பூவன். இவரது மனைவி 70 வயது சீதாலட்சுமி.இவர்களது மகள் 45 வயது ராமஜெயந்தி. இதில் பூவன் இறந்துவிட்டதால், தாய்-மகள் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இந்நிலையில், மார்ச் 3ம் தேதி வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் சீதாலட்சுமி, ராமஜெயந்தி ஆகிய 2 பேரையும் கழுத்தை நெரித்துக் கொலை செய்தனர். அத்துடன் அவர்கள் அணிந்திருந்த சுமார் 13 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். இந்த இரட்டை கொலை குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 9 தனிப்படை அமைத்து மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தினர். சந்தேகத்தின் பேரில் 10க்கும் மேற்பட்டவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.அப்போது, இந்த சம்பவத்தில் ஈடுபட்டது எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி கிராமத்தை சேர்ந்த வேல்முருகன், மேலநம்பிபுரத்தை சேர்ந்த மகேஷ் கண்ணன், முனீஸ்வரன் என்பது தெரியவந்தது. இவர்கள் கஞ்சா போதையில் இந்த கொலை, கொள்ளையை அரங்கேற்றியதும் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து முத்துலாபுரம் காட்டுப்பகுதியில் வேல்முருகன், மகேஷ் கண்ணன் இருவரையும் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
What's Your Reaction?






