கேரளாவில் செல்போனால் உயிர்போன அவலம்;வெளிநாடு செல்ல இருந்த செவிலியர் உயிரிழப்பு

May 7, 2024 - 15:34
 0  14
கேரளாவில் செல்போனால் உயிர்போன அவலம்;வெளிநாடு செல்ல இருந்த செவிலியர் உயிரிழப்பு

கேரள மாநிலம் ஹரிபாட் பகுதியைச் சேர்ந்த, செவிலியர் சூர்யா சுரேந்திரன். இவருக்கு அண்மையில் இங்கிலாந்தில் வேலை கிடைத்ததால் அண்டை வீட்டாரிடம் சொல்லிவிட்டு விமான நிலையம் செல்ல முற்பட்டார். அப்போது செல்போனில் பேசியபடியே அங்கு செடியில் இருந்த அரளி பூவைத் தன்னை அறியாமல் பிய்த்து தின்றதாகக் கூறப்படுகிறது.இந்நிலையில், நெடும்பச்சேரி விமான நிலையம் செல்லும்போது ஆலப்புழாவில் குமட்டல் ஏற்பட்டு வாந்தி எடுத்ததையடுத்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நிலையில் மீண்டும் உடல்நிலை மோசமடைந்ததால் பருமலையில் உள்ள மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.உடற்கூராய்வில் அரளிப்பூவில் இருந்த விஷம் மாரடைப்பை ஏற்படுத்தியதால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.இந்நிகழ்வு குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow