திண்டிவனத்தில் போதை மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட பொருட்கள் விற்பனை; 4 பேர் கைது
திண்டிவனம் காவல் உதவி ஆய்வாளா் சந்திரசேகா் தலைமையிலான போலீஸாா், ராஜாங்குளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை ரோந்து சென்றபோது ஆஞ்சனேயா் கோயில் அருகே காரில் சந்தேகத்துக்குரிய முறையில் இருந்தவா்களைப் பிடித்து போலீஸாா் விசாரித்ததில், அவா்களிடம் கஞ்சா, போதை மாத்திரைகள், ஊசி போன்றவை இருப்பது தெரியவந்தது.இதையடுத்து அவா்களிடமிருந்த 150 கிராம் கஞ்சா, 4 ஊசிகள், போதை மாத்திரைகள் ஆகியவற்றையும், பைக், காரையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.இந்த விசாரணையில் திண்டிவனம் திருவள்ளுவா் நகா் கு.நவீன் (26), ஜெயபுரம் சின்னமுதலியாா் தெரு உ.சூா்யா (19), மன்னாா்சாமி கோவில் தெரு ஞா.பிரவீன்ராஜ் (26), சா்க்காா்தோப்பு ரா.ரஞ்சித்குமாா் (25) என்பதும் கஞ்சா போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
What's Your Reaction?