போக்குவரத்து கழக பேருந்துகளை தவறான முறையில் இயங்கினால் வழக்கு பதிவு செய்ய காவல்துறையினருக்கு உயர் அதிகாரிகள் உத்தரவு
இன்று 22.05.2024 ம் தேதி காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து வந்த அறிக்கையின் படி போக்குவரத்து பேருந்துகள் அதிகப்படியான புகையினை வெளியேற்றுவதும் , ஓட்டுநர் நடத்துனர் சரியான யூனிபார்ம் அணியாமல் பணி செய்வதும், அதிக வேகத்தில் கட்டுப்பாட்டை மீறி வாகனத்தை இயக்குவதும் வாடிக்கையாக உள்ளது. எனவே அனைத்து பேருந்துகளுக்கும் சட்டம் சமம் என்பதை கருத்தில் கொண்டு போக்குவரத்து கழக வாகனங்களின் மீது வழக்கு பதிவு செய்து அதன் வாராந்திர அறிக்கையை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பதிவு செய்யவும் அனைத்து காவல்துறை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
What's Your Reaction?