நாளை பிரதமர் தமிழகம் வருகை

பிரதமர் மோடி நாளை தமிழகத்திற்கு வருகை தர உள்ளார். கன்னியாகுமரியில் கடலுக்கு நடுவே உள்ள விவேகானந்தர் தியான மண்டபத்தில் 3 நாட்கள் தங்கியிருந்து தியானம் செய்கிறார்.இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை முன்னிட்டு கன்னியாகுமரி பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா நாளை தமிழகம் வருகிறார்.ஏற்கனவே அமித்ஷா பலமுறை தமிழகம் வர திட்டமிட்டு, பிறகு கடைசி நேரத்தில் அவரின் வருகை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், அமித்ஷா தமிழக வருகை உறுதி செய்யப்பட்டுள்ளது. நாளை தமிழகம் வரும் அமித் ஷா திருமயத்தில் உள்ள கோட்டை பைரவர் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பிரதமர் மோடி நாளை தமிழகம் வர இருப்பதை அடுத்து, அமித்ஷாவும் தமிழகம் வர இருக்கிறார் என்பதால் இந்நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது.
What's Your Reaction?






