பெங்களூரில் ஸ்கூட்டர் விலையை மிஞ்சிய போக்குவரத்து அபராத தொகை
கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பானஸ்வாடி, காக்ஸ் டவுன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு ஸ்கூட்டரில் பெண் ஒருவர் வழக்கமாக ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டுவது, ஹெல்மெட் அணியாமல் பயணிகளை ஏற்றிச் செல்வது, தவறான திசையில் வாகனம் ஓட்டுவது, வாகனம் ஓட்டும் போது அலைபேசியில் பேசுவது, சிக்னல்களை மதிக்காமல் கடப்பது என பல்வேறு விதிமீறல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த சம்பவங்கள் அனைத்தும் பெங்களூரு போக்குவரத்து சாலைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகிய நிலையில் விதிமீறல்களுக்காக அந்த பெண்ணின் வாகன அபராதம் ரூ.1.36 லட்சம் விதிக்கப்பட்டது. அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது அவர் ஓட்டும் ஸ்கூட்டரின் விலையை விட அதிகம் எனவும் இதனை கருத்தில் கொண்டு இதுபோன்ற அபராதங்களைத் தவிர்த்து உணர்வுள்ள வாகன ஓட்டிகள் சாலை போக்குவரத்து விதிகளைப் பின்பற்றுமாறு பெங்களூரு போக்குவரத்து காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
What's Your Reaction?