தருமபுரியில் போதை ஒழிப்பு உறுதிமொழி

Aug 13, 2024 - 04:11
 0  9
தருமபுரியில் போதை ஒழிப்பு உறுதிமொழி

நேற்று 12.08.2024 போதை பொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு தருமபுரி அரசு கலை கல்லூரியில் நடைபெற்றது. அதில் போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன். மேலும் எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன். போதைப்பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன். போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்குத் துணைநிற்பேன். மாநிலத்தின் வளர்ச்சிக்கும் மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதிகூறுகிறேன் என உறுதிமொழி ஏற்கப்பட்டது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow