காவல் நிலைய வாசலிலேயே அடித்து கொல்லப்பட்ட ஆடிட்டர்; சகோதரிக்காக இளைஞர் வெறிச்செயல்

Apr 12, 2024 - 14:23
 0  28
காவல் நிலைய வாசலிலேயே அடித்து கொல்லப்பட்ட ஆடிட்டர்; சகோதரிக்காக இளைஞர் வெறிச்செயல்

திருவள்ளூர் அடுத்த கண்ணதாசன் நகர் பெரியார் தெருவைச் சேர்ந்தவர் ராபர்ட். இவர் காக்களூர் பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் ஆடிட்டராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் அதே பகுதியில் உள்ள நிறுவனத்தில் லாவண்யா (வயது 26) என்ற பெண் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு திருமணம் செய்ய அவரது பெற்றோர் முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் லாவண்யாவை ஆடிட்டர் ராபர்ட் கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து லாவண்யா திருவள்ளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ராபர்ட்(46) மீது புகார் அளித்ததைத் தொடர்ந்து ஆடிட்டர் விசாரணக்கு ஆஜரானார் விசாரணையை முடித்துக் கொண்டு ராபர்ட் மீண்டும் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது அங்கு காத்துக் கொண்டிருந்த லாவண்யாவின் சகோதரர் மௌலி காவல் நிலைய வாசலிலேயே ராபர்ட்டின் தலையில் 3 முறை பலமாக தாக்கியுள்ளார். இதனால் காவல் நிலைய வாசலிலேயே சுருண்டு விழுந்த ராபர்ட் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயரிழந்தார். இதனைத் தொடர்ந்து மௌலியை உடனயடிாக கைது செய்த காவல் துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல் நிலைய வாசலில் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow