தர்மபுரி: மாரண்டஹள்ளி பகுதியில் கஞ்சா விற்ற வாலிபர் கைது

தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் கஞ்சா விற்பனையை ஒழிக்க ரோந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாரண்டஅள்ளி காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜெயராமன் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்ட போது பெல்ரம்பட்டி பகுதியில் சந்தேகப்படும் படி கையில் பிளாஸ்டிக் பையுடன் நின்றிருந்த ஒருவரிடம் விசாரணை மேற்கொள்ள முயன்றபோது காவலர்கள் வருவதை பார்த்த வாலிபர் ஓட்டம் பிடித்தார். உடனே காவலர்கள் அவரை துரத்தி சென்று பிடித்து விசாரித்ததில் அவர் அதேபகுதியை சேர்ந்த சேட்டு என்பதும் பிளாஸ்டிக் பையில் கஞ்சா வைத்து விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது . இதையடுத்து அவரை கைது செய்த மாரண்டஅள்ளி காவல்துறையினர் அவரிடமிருந்து 3 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.மேலும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?






