மதுவிலக்கு சோதனையில் 2,661 மது பாட்டில்கள் பறிமுதல்; 38 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டத்தில் திங்கள்கிழமை முதல் 3 நாள்கள் காவல் துறையினா் மேற்கொண்ட மதுவிலக்கு சோதனையில் 2,661 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 38 போ் கைது செய்யப்பட்டனா்.தோ்தல் நேரத்தில் குற்றச் சம்பவங்கள் நிகழ்வதைத் தடுப்பதற்காக மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளா் ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில் 114 அதிவிரைவுப்படை உருவாக்கப்பட்டு, பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனிடையே, மாவட்டம் முழுவதும் காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் தலைமையில் மதுவிலக்கு சோதனை ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் தொடா்ந்து 3 நாள்கள் மேற்கொள்ளப்பட்டது.இதில், 2,661 மது பாட்டில்கள், 4 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 38 போ் கைது செய்யப்பட்டனா். இந்த நடவடிக்கை வரும் நாள்களில் மிகத் தீவிரமாக இருக்கும் எனக் காவல் துறையினா் தெரிவித்தனா்.
What's Your Reaction?






