காதலித்த பெண்ணுக்கு சரமாரி வெட்டு; முன்னாள் காதலன் வெறிச்செயல்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த எல்ஐசி பில்டிங் பின்புறம் உள்ள ராஜீவ் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த குமார் மகள் இந்துமதி, அதே பகுதியைச் சேர்ந்த அனுமுத்து மகன் ஆட்டோ ஓட்டுனரான அஜித்குமார் ஆகிய இருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிய வர கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவருடன் இந்துமதியை திருமணம் செய்து வைத்துள்ளனர். இந்நிலையில் ஐந்து வயதில் பெண் குழந்தை உள்ளது.இந்துமதிக்கும் கணவர் கார்த்திக்கும் இடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாணியம்பாடியை விட்டு திருப்பத்தூர் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் உள்ள அம்மா வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில் மீண்டும் இந்துமதி மற்றும் அஜித் குமார் இருவரிடையே காதல் மலர்ந்துள்ளது. பின்னர் இருவரும் நன்றாக பேசி வந்த நிலையில் திடீரென இந்துமதி அஜித் குமாரிடம் பேச மறுத்து விலகியுள்ளார்.அதனை தொடர்ந்து விரக்தியில் இருந்த அஜித்குமார் திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகே அஜித்குமார் இந்துமதியை பார்த்து பேசிய நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் அஜித்குமார் ஆத்திரமடைந்து திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக முகம் மற்றும் இந்துமதியின் உடம்பில் பல்வேறு பகுதிகளில் வெட்டி விட்டு தப்பியுள்ளார்.பின்னர் அங்கிருந்த பொதுமக்கள் இந்துமதியை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஆட்டோவில் அழைத்துச் சென்றனர். மேலும் இந்துமதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இதனை அறிந்த அஜித்குமார் திருப்பத்தூர் நகரகாவல் நிலையத்தில் தானாக முன் சென்று சரணடைந்தார். மேலும் இதுகுறித்து திருப்பத்தூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
What's Your Reaction?






