சுற்றுலா சென்ற இடத்தில் பரிதாபம்; சுற்றுலா பேருந்து கவிழ்ந்து இருவர் பலி
கேரளாவில் நடந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த 2 சுற்றுலா பயணிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.சிவகங்கையில் இருந்து 21 பேர் கொண்ட குழுவினர் அண்டை மாநிலமான கேரளாவுக்கு பஸ்சில் சுற்றுலா சென்றபோது இடுக்கி அருகே உடும்பஞ்சோலை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் பேருந்து வேகமாகச் சென்ற நிலையில் டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்து கவிழ்ந்ததை அறிந்த அப்பகுதி மக்கள் உடனடியாக மீட்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் மீட்பு படையினருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்ததின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.விபத்தில் சிவகங்கையைச் சேர்ந்த ரஜீனா (20), சனா (7) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?