உணவு ஆர்டர் செய்த பெண்ணிடம் அத்துமீறல்;சென்னையில் பரபரப்பு

May 31, 2024 - 09:52
 0  11
உணவு ஆர்டர் செய்த பெண்ணிடம் அத்துமீறல்;சென்னையில் பரபரப்பு

சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த 24 வயது இளம் பெண் நேற்று முன்தினம் ஆன்லைன் மூலம் உணவு ஆர்டர் செய்துள்ளார்.இதையடுத்து உணவு பார்சலை வழங்குவதற்காக தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தின் ஊழியர் அங்கு வந்துள்ளார். அப்பொழுது அந்த இளம் பெண் தனது வீட்டில் தனியாக இருந்துள்ளார்.அப்போது அந்த பெண்ணின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த உணவு டெலிவரி ஊழியர், பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட பெண் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் தேனாம்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து உணவு டெலிவரி செய்ய வந்த நபர் யார் என்று விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபரை கண்டுபிடித்தனர்.விசாரணையில், சென்னை எருக்கஞ்சேரியைச் சேர்ந்த ரவிக்குமார் (48) உணவு டெலிவரி செய்ய சென்றபோது இளம் பெண்ணிடம் அத்துமீறி நடந்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து தேனாம்பேட்டை போலீசார், உணவு டெலிவரி ஊழியர் ரவிக்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow