கோவை:உயர் ரக போதை மாத்திரைகள் விற்ற 5 பேர் கைது

கோவை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் விற்பனையை முற்றிலும் தடுக்க கோவை மாநகர போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.அதன்படி கோவை கரும்புக்கடை காவல் நிலைய போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சுண்ணாம்பு கால்வாய் பகுதியில் சந்தேகிக்கும் வகையில் சுற்றித்திரிந்த 5 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட மெத்தபட்டோமின் மற்றும் 116 போதை மாத்திரைகள் விற்பனைக்காக வைத்திருந்தது கண்டறியப்பட்டது.விசாரணையில், அவர்கள் கர்நாடகா மாநிலம் ஹூப்ளி பகுதியை சேர்ந்த பிரவின் செட்டி (36), கோவை குறிச்சி பிரிவை சேர்ந்த சாகுல் அமீது (27), சவுரிபாளையத்தைச் சேர்ந்த முருகன் (27), குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்த ரியாஸ்கான் (24) மற்றும் சுண்ணாம்பு கால்வாய் பகுதியை சேர்ந்த அக்பர் அலி (28) என்பது தெரியவந்தது. கைதான் பிரவின் செட்டி கர்நாடகா மாநிலம் ஹூப்ளி என்ற இடத்தில் மருந்துக்கடை நடத்தி வருகிறார். அவர் அங்கிருந்து உயர் ரக போதை மாத்திரைகளை கொண்டு வந்து சாகுல் அமீது, முருகன், ரியாஸ்கான், அக்பர் அலி ஆகியோர் மூலம் விற்பனை செய்ய முயன்றுள்ளார். 14 ரூபாய் மதிப்புள்ள இந்த மாத்திரைகளை ரூ.60 விற்று வந்தம் தெரியவந்து உள்ளது. இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
What's Your Reaction?






