மெத்தபெட்டமைன் போதை பொருள் கடத்தல்; கடத்தலில் ஈடுபட்டோர் அதிரடி கைது

Jun 29, 2024 - 18:15
 0  4
மெத்தபெட்டமைன் போதை பொருள் கடத்தல்; கடத்தலில் ஈடுபட்டோர் அதிரடி கைது

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள புதுப்பட்டி புறவழிச்சாலை பகுதியில் பெரியகுளம் வடகரை காவல் ஆய்வாளர் டின் தினகரன் தலைமையிலான போலீஸார் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டு வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது கேரள பதிவெண் கொண்ட காரை நிறுத்தி வாகன சோதனை நடத்தியபோது, ​​முதலில் அவர்களிடம் 250 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து வாகனத்தில் வந்த 3 பேரையும் கைது செய்து வாகனத்தை பறிமுதல் செய்து பெரியகுளம் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர். சர்வதேச சந்தையில் கிடைக்கும் மெத்தபெட்டமைன் என்ற போதைப்பொருள் கடத்தியது தெரிய வந்தது. பின்னர் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வந்த தகவலையடுத்து தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பெரியகுளம் காவல் நிலையத்திற்கு வந்து நேரடி விசாரணை நடத்தி வருகிறார்.மேலும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் அளவு மற்றும் அதன் சர்வதேச சந்தை குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் கேட்க முயன்றபோது, ​​பெரியகுளம் துணைக் காவல் கண்காணிப்பாளர் செய்தியாளர்களிடம் தெரிவிக்க மறுத்துவிட்டார். மேலும் கைது செய்யப்பட்ட நபர்களின் விவரங்களையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow