ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி 11-ம் வகுப்பு மாணவன் பலி; போலீஸ் விசாரணை

May 10, 2024 - 12:54
May 10, 2024 - 13:20
 0  28
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி 11-ம் வகுப்பு மாணவன் பலி; போலீஸ் விசாரணை

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அகரம் பகுதியைச் சேர்ந்தவர் மாது. இவரது மகன் முனிவேல் இவர் கம்மாளப்பட்டி அரசு பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இந்நிலையில் மாது நேற்று தனது உறவினரின் ஈம காரியத்திற்காக குடும்பத்தினருடன் ஒகேனக்கல்லை அடுத்த ஆலம்பாடி பரிசல் துறை காவிரி ஆற்றில் குளித்தபோது முனிவேல் ஆழமான பகுதியில் சென்று குளித்ததாக கூறப்படுகிறது.அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் மூழ்கியதை கண்ட உறவினர்கள் மற்றும் அருகில் இருந்தவர்கள் காப்பாற்ற முயன்றும் முனிவேலை அவர்களால் காப்பாற்ற முடியவில்லை.இது குறித்து உறவினர்கள் ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஆற்றில் மூழ்கிய முனிவேலை தீவிரமாக தேடிய நிலையில் சில மணி நேரங்களுக்கு பிறகு முனிவேலின் உடலை மீட்ட போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.படிப்பிலும்,ஒழுக்கத்திலும் சிறப்பாக விளங்கிய மாணவன் உயிரிழந்தது உறவினர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow