டிஜிபி உத்தரவின் பேரில் தந்தையை தாக்கிய மகன் மீது வழக்குப்பதிவு
சேலம் மாவட்டம் ஆத்தூர் பகுதியில் வாழும் அமிர்தா சேகோ தொழிற்சாலை நிறுவனர் திரு. குழந்தை வேலு அவர்களை அவரது மகன் சந்தோஷ் சொத்திற்காக அடித்து உதைத்து கொடுமை படுத்தும் காட்சிகள். தாக்குதலுக்கு ஆளான திரு. குழந்தை வேலு அவர்கள் கடந்த 21.04.2024 அன்று இறந்ததை அடுத்து காவல்துறை சந்தோஷ் மீது எவ்வித வழக்கையும் இது வரை பதிவு செய்யவில்லை. ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டு வழக்கை பதிவு செய்யாமல் ஒரு கொடும் படுகொலையை மூடி மறைக்க பார்க்கின்றனர் என குற்றச்சாட்டு எழுந்தது.தந்தையை மகன் அடித்து கொன்று வீடியோ வெளியாகி பரபரப்பானது. இந்த விவகாரத்தில் காவல்துறையினர் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாக சமூக வலைதளங்கள் தகவல் பரவியது.இந்தச் செய்தி டிஜிபி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அதன் மீது நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் அதிகாரிகளை அழைத்து வழக்கு பதிவு செய்யவும் உத்தரவிட்டு, தற்போது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
What's Your Reaction?