எச்சில் துப்பியதற்கு கொலையா...மயிலாடுதுறை அருகே கொடூரம்

Apr 18, 2024 - 02:29
 0  8
எச்சில் துப்பியதற்கு கொலையா...மயிலாடுதுறை அருகே கொடூரம்
எச்சில் துப்பியதற்கு கொலையா...மயிலாடுதுறை அருகே கொடூரம்

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவில் உள்ள வைதீஸ்வரன் கோயில் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மருவத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் 36 வயதான சுக்தேவ்.ஜூன் 8, 2020 அன்று, கொரோனா காலத்தில், அவருக்கும், மருவத்தூர் பெரியத்தெருவைச் சேர்ந்த ஆனந்தனுக்கும் எச்சில் துப்பியதற்காக வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து ஆனந்தனின் மகன் மற்றும் உறவினர்கள் 5 பேர் சேர்ந்து சுக்தேவை கட்டையால் தாக்கியதில் பலத்த காயம் அடைந்த சுகதேவ் புதுச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிதாபமாக இறந்தார்.இந்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு மயிலாடுதுறை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் அரசு வழக்கறிஞர் ராமசேயோன் ஆஜராகி 19 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். கொலை வழக்கில் தொடர்புடைய ரவிச்சந்திரன், 55, அரவிந்த், 31, பாலகுரு, 49, சிவசாமி, 60, சிவகுரு, 58, ஆகிய 5 பேர் மீதும், அனைத்து சாட்சிகளும் அளித்த சாட்சியத்தின் மூலம், கொலைக் குற்றம் நிரூபிக்கப்பட்டதாக, நீதிபதி விஜயகுமாரி உத்தரவிட்டார்.குற்றவாளிகள் 5 பேரையும் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். அரசு வக்கீல் ராமசேயோன் கூறியதாவது: திருச்சி மத்திய மண்டலத்தில் கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என்று குறிப்பிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow