கன்னியாகுமரி மாவட்டம் முள்ளூர்துறையில் பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்கள் பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை காவல் நிலையத்திற்குட்பட்ட முள்ளூர்துறை கடற்கரை கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான மீன் சேகரித்து வைக்கக்கூடிய ஐஸ் ஆலை உள்ளது. தற்போது பயன் இல்லாமல் பாழடைந்து காணப்படும் இந்த ஆலைக்குள் குறிப்பிட்ட அரசியல் கட்சியினர், நாளை மறுநாள் தேர்தல் நடைபெறவுள்ளதால் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக மது பாட்டில்களை பதுக்கி வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அதனை தொடர்ந்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டனர். அப்போது முள்ளூர்துறை கடற்கரை கிராமத்தில் ஐஸ் ஆலைக்குள் அட்டை பெட்டிகளில் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். சுமார் ரூ.5 லட்சம் மதிப்பிலான 3,400 மதுபாட்டில்களை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டதா? என விசாரணை நடைபெற்று வருகிறது. மதுபாட்டில்களை பறிமுதல் செய்து அதை பதுக்கி வைத்த நபர் குறித்து புதுக்கடை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?