டிராக்டர் மோதி 7-ம் வகுப்பு மாணவன் பலி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியை அருகே பண்ணந்தூர் பகுதியை சேர்ந்த வேடியப்பன்- மலர்விழி தம்பதி.இவருடைய மகன் கணபதி (13) இவர் பண்ணந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் சாணாங்கொல்லை பகுதியில் சாலையில் நடந்து சென்றபோது அந்த வழியாக வந்த டிராக்டர் மாணவன் மீது மோதியதில் பலத்த காயம் அடைந்த கணபதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலன் இன்றி கணபதி பரிதாபமாக உயிரிழந்தார்.இந்த விபத்து சம்பவம் குறித்து பாரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
What's Your Reaction?