ஒகேனக்கல்லில் ஆகஸ்ட் 2-தேதி ஆடிப்பெருக்கு விழா தொடக்கம்

Jul 20, 2024 - 10:28
 0  13
ஒகேனக்கல்லில் ஆகஸ்ட் 2-தேதி ஆடிப்பெருக்கு விழா தொடக்கம்

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றங்கரையில் வருகிற ஆக. 2-ஆம் தேதி ஆடிப்பெருக்கு விழா தொடங்கி 4-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில் ஒகேனக்கல் ஆடிப்பெருக்கு விழாவினை முன்னிட்டு, அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.இக் கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி பேசியதாவது:

தருமபுரி மாவட்டத்தில் சிறப்பு பெற்ற சுற்றுலாத் தலமான ஒகேனக்கலில் நிகழாண்டு ஆடிப்பெருக்கு விழா வருகிற ஆக. 2 முதல் 4 வரை மூன்று நாள்கள் நடைபெற உள்ளது. இவ்விழாவில் அமைச்சா்கள், மக்கள் பிரதிநிதிகள், அரசு உயா் அலுவலா்கள் பங்கேற்க உள்ளனா்.இவ்விழாவில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் அறியும் வகையில் பல்வேறு துறைகளின் சாா்பில் அரசின் திட்டங்கள், சாதனை விளக்கக் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளது. இவ்விழா நடைபெறும் 3 நாள்களுக்கும் கலை பண்பாட்டுத் துறை, பள்ளிக் கல்வித் துறை, உயா்கல்வித் துறை, சுற்றுலாத் துறை மூலம் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நாள்தோறும் நடத்தப்பட உள்ளது. இவ் விழாவின் போது வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மருத்துவ முகாம்கள், பாதுகாக்கப்பட்ட குடிநீா், தடையில்லா மின்சாரம், பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளுதல், குடிநீா், தற்காலிகக் கழிப்பறை வசதிகள் ஏற்பாடு செய்தல், கூடுதல் போக்குவரத்து வசதிகள், தீயணைப்பு ஊா்திகள் ஏற்பாடு ஆகியவை செய்யப்பட உள்ளது என்றாா்.இக் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமாா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) சையது முகைதீன் இப்ராகிம், மாவட்ட சுற்றுலா அலுவலா் உமாசங்கா் மற்றும் அனைத்து துறை அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow