குடிநீர் வேண்டி பல கிலோமீட்டர் பயணிக்கும் கிராம மக்கள்; மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா..? என பொதுமக்கள் கோரிக்கை

Jul 24, 2024 - 11:54
 0  83

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி வட்டம் கச்சைகட்டி கிராமம் பாண்டியர் கோட்டை பகுதியில் குடிநீருக்காக போராட்டக் களத்தில் இறங்கிய கிராம மக்கள். மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அடுத்த பாண்டியர் கோட்டை பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. பகுதி மக்கள் தங்களுக்கு குடிநீர் வசதி வேண்டும் எனக்கு கோரிக்கை விடுத்திருந்த நிலையில் சில இடங்களில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் குடிநீர் குழாய் அமைத்த நாள் முதல் இன்று வரை ஒரு சொட்டு கூட குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என ஊர் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து பல தரப்புகளில் புகார் மனுக்களை அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறுவது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow