தர்மபுரி அருகே பள்ளி அருகாமையில் புகையிலை பொருட்களை விற்ற டீக்கடைக்கு சீல்

பாப்பிரெட்டிப்பட்டி உணவு பாதுகாப்பு அலுவலர் குமணன் தலைமையில், பாப்பிரெட்டிப்பட்டி எஸ்.ஐ., அஜித்குமார் மற்றும் போலீசார் பாப்பிரெட்டிப்பட்டி, சாமியாபுரம் கூட்ரோடு, மஞ்சவாடி, பையர்நத்தம் மற்றும் மோளையானுார் பகுதிகளில், 20க்கும் மேற்பட்ட மளிகை, பெட்டி கடை, டீக்கடைகளில் சோதனை நடத்தினர்.இதில், ஒரு டீக்கடையில் தடை செய்த புகையிலை பொருட்கள் இருந்ததை பறிமுதல் செய்தனர்.இதையடுத்து டீக்க-டையை பூட்டி சீல் வைத்து, 25,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.இதேபோல், 6 பெட்டிக்கடைகளில் தடை செய்யப்பட்ட, 2,000 ரூபாய் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பள்ளி அருகே புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
What's Your Reaction?






