எம்.பி வேட்பாளரின் பாதுகாவலரை கொல்ல முயற்சி; மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை

May 16, 2024 - 01:03
 0  10
எம்.பி வேட்பாளரின் பாதுகாவலரை கொல்ல முயற்சி; மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை

ஆந்திர மாநிலம், நந்தியாலா மாவட்டம், அலகட்டாவில் தெலுங்கு தேசம் வேட்பாளர் பூமா அகிலப்ரியாவின் மெய்க்காப்பாளர் நிகில்.நேற்றிரவு அகிலபிரியாவின் வீட்டின் முன் நிகில் காவலுக்கு நின்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதிவிட்டு சிறிது தூரம் நிற்காமல் சென்றது. காரில் இருந்து இறங்கிய குண்டர்கள், கார் மோதிய பாதையில் தூக்கி வீசப்பட்ட நிகிலை கொல்ல முயன்றனர்.குண்டர்கள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் நிகில் பலத்த காயமடைந்தார், அவருடன் இருந்த மற்ற காவலர்கள் அவர்களைப் பிடிக்க முயன்றனர். ஆனால் அவர்கள் காரில் ஏறி தப்பிச் சென்றனர். இதுகுறித்து வேட்பாளர் அகிலபிரியா, காவலாளி நிகில் அளித்த புகாரின் பேரில் போலீசார் அங்கு வந்து நிகிலை சிகிச்சைக்காக அலகட்டா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.வேட்பாளர் அகிலபிரியா வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான கொலை முயற்சி தொடர்பான காட்சிகளை போலீசார் கைப்பற்றி குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். துரத்திச் சென்று பிடிப்பதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பிச் செல்லும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow