இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்ய முயற்சி;சினிமா பாணியில் மடக்கிய போலீசார்

May 25, 2024 - 22:17
 0  9
இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்ய முயற்சி;சினிமா பாணியில் மடக்கிய போலீசார்

சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் 21 வயது இளம்பெண் செவிலியராக பணிபுரிந்து வருகிறார்.வேலைக்கு சென்று கொண்டிருந்த போது, மர்ம கும்பல் ஒன்று திடீரென அவரை வழிமறித்து காரில் கடத்தி சென்றது. இது தொடர்பாக உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.அதன் அடிப்படையில் போலீசார் துரித விசாரணை நடத்தினர். அப்போது, இளம்பெண்ணை கடத்திய கார் செங்கல்பட்டு வழியாக தென் மாவட்டம் நோக்கி செல்வதை காவல் துறையினர் உறுதி செய்தனர். இதையடுத்து சென்னை, திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகள் மற்றும் சோதனைச் சாவடிகளில் காவல் துறையினர் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.அப்போது, செங்கல்பட்டு மாவட்டம், ஆத்தூர் சுங்கச்சாவடிக்கு சந்தேகத்திற்கிடமான வகையில் வந்த கார் ஒன்று, இளம்பெண்ணை ஏற்றிச் செல்வது தெரியவந்தது. உடனே தப்பியோட முயன்ற 4 பேரையும் போலீஸார் கைது செய்து அச்சரப்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து விசாரணையில், காரைக்குடியில் உள்ள இளம்பெண் மற்றும் அவரது உறவினர் சபாபதி (27). சிறுவயதில் இருந்தே காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஆறு மாதங்களாக சபாபதியிடம் பேசுவதை அந்த இளம்பெண் நிறுத்தியுள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த சபாபதி (27) தனது நண்பர்களான ஹரிஹரன் (20), அஜய் (25), ராஜேஷ் (39) ஆகியோரை அழைத்துள்ளார். அவர்களுடன் சேர்ந்து பெண்ணை கடத்திச் சென்று திருமணம் செய்ய முயன்றது தெரியவந்தது. இது தொடர்பாக 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய கார் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow