மண்டை ஓடுகளுடன் வந்த அகோரியால் பெரும் பரபரப்பு;பக்தர்கள் பீதி

திருவண்ணாமலை: அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு காரில் மண்டை ஓடுகளுடன் வருகை தந்த அகோரி ஒருவரால் மக்கள் பீதியடைந்தனர்.
வெள்ளிக்கிழமையன்று அந்த அகோரிஇ கோவிலுக்கு வந்தார்.
அங்குள்ள தேரடி வீதியில் தனது காரை நிறுத்திவிட்டு அவர் கோவிலுக்குள் சென்றார். பார்ப்பதற்கு வித்தியாசமாகக் காட்சி அளித்ததால் பொதுமக்கள் பலரும் அதன் அருகே சென்று பார்த்தனர்.
எனினும் காரின் முன்புறத்தில் சில மண்டை ஓடுகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு பலரும் பீதியில் ஓட்டம் பிடித்தனர்.
What's Your Reaction?






