மாநில அளவில் முதலிடம்;ஊத்துக்குளி மாணவி கீர்த்தனா சாதனை
திருப்பூர், ஜூன் 15: தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையம் நடத்திய தொகுதி 1 ஏ தேர்வில் உதவி வனப் பாதுகாவலர் பணியிடத்துக்கான தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்து ஊத்துக்குளியை சேர்ந்த மாணவி கீர்த்தனா தேர்வாகி உள்ளார். தமிழ்நாடு அரசுப் பணிகள் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தொடர்ச்சியாக பங்கேற்று, தொடர் முயற்சியின் விளைவாக கீர்த்தனா தேர்ச்சி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த எழுத்துத்தேர்வில் 564.75 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்தார். நேற்று முன் தினம் நடந்த நேர்முகத் தேர்வில் 90 மதிப்பெண் பெற்றார். இரு தேர்வுகளிலும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக 654.75 மதிப்பெண்களும் பெற்று, மாநில அளவில் முதலிடம் பிடித்தார். இதன்மூலம் அவர் தமிழ்நாடு வனத்துறை பணியில் உதவி வனப் பாதுகாவலராக தேர்வு பெறுகிறார்.
What's Your Reaction?