மேட்டுபாளையம்-கோவை மெமு ரயிலில் பெண்களை ஆபாச படம் எடுத்த வழக்கறிஞர் கைது

Sep 22, 2024 - 02:39
 0  10
மேட்டுபாளையம்-கோவை மெமு ரயிலில் பெண்களை ஆபாச படம் எடுத்த வழக்கறிஞர் கைது

மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் மெமு ரயிலில் கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு சமீப காலமாக தொடர்ந்து ஒரு நபர் தொந்தரவு கொடுத்து வருவதாக மேட்டுப்பாளையம் ரயில்வே காவல் நிலையத்தில் ஒரு மாணவி புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ரயில்வே போலீசார் அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர், மேட்டுப்பாளையம் முனிசிபல் காலனி மணி நகர் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் அப்துல் ரசாக் (40) என்பது தெரியவந்தது.இவர் கோவை செல்லும் ரயிலில் தொடர்ச்சியாக கல்லூரி மாணவி மற்றும் இளம்பெண்களை கடந்த 6 மாதங்களாக பின் தொடர்ந்து ஆபாசமாக புகைப்படம் எடுத்து வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து, 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்த மேட்டுப்பாளையம் ரயில்வே போலீசார் அவரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர். கடந்த ஓராண்டுக்கு முன்பே வடகோவை ரயில் நிலையத்தில் இதுபோன்று பெண்களை புகைப்படம் எடுத்தபோது பொதுமக்கள் அவரை பிடித்து அடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow