துண்டு துண்டாக வெட்டி பாம்பு கறி சமைக்க முயன்ற வாலிபர் கைது

திருப்பத்தூர் மாவட்டத்தில் வசித்து வரும் ராஜேஷ்குமார் சாரை பாம்பின் தோலை உரிப்பது போன்ற வீடியோ ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.அந்த வீடியோ வைரலான நிலையில் ராஜேஷ் குமாரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.ராஜேசிடம் இது குறித்து நடத்தப்பட்ட விசாரணையில், சாரைப் பாம்பை அவர் சமைத்து சாப்பிட்டது தெரியவந்தது.இதனை தொடர்ந்து வேறு ஏதாவது விலங்குகளை ராஜேஷ் குமார் வேட்டையாடி உள்ளாரா என்பது குறித்து அவரிடம் அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
What's Your Reaction?






